
திருச்சியில் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.
திருச்சியில் நூற்று கணக்கான மாணவர்கள் ஐரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் உழவர்சந்தை அருகே போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் வலைத்தளங்களில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவிய தகவலால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காவலர்களின் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் காவல் துரையின் அனுமதி இன்றி போராட்டம் நடத்தினால் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்...