தம்பியை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை; உடந்தையாக இருந்த அண்ணன் மனைவி, மகன்களுக்கும் அதே தண்டனை…

 
Published : Mar 29, 2017, 10:35 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
தம்பியை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை; உடந்தையாக இருந்த அண்ணன் மனைவி, மகன்களுக்கும் அதே தண்டனை…

சுருக்கம்

Brother killing brother sentenced to life Was complicit brother wife sons of the same sentence

சிவகங்கையில் நிலத்துக்காக சொந்தத் தம்பியைக் கொலை செய்த அண்ணனுக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மற்றும் மகன்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் (65). இவர் அதே ஊரில் பரம்பரை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இவருக்கும், இவரது சகோதரர் கோபால கிருஷ்ணனுக்கும் (50) நிலத்தை பங்கு பிரிப்பதில் தகராறு இருந்தது.

கடந்த 2009-ல் நீலமேகம், அவரது மனைவி லட்சுமி (60), மகன்கள் கந்தன் (32), ஹரி கிருஷ்ணன் (35) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கோபால கிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இதுகுறித்து காளையார்கோவில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து நால்வரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் நீலமேகம், லட்சுமி, கந்தன், ஹரி கிருஷ்ணன் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி ஜோதிராமன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?