டெல்லியை நோக்கி படையெடுக்கும் தமிழக விவசாயிகள்.. தேர்தலில் மட்டும் கவனம் செலுத்தும் தமிழக அரசு..

First Published Apr 4, 2017, 11:30 AM IST
Highlights
trichy farmers travelling to delhi


டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்க திருச்சியை சேர்ந்த சுமார் 30 விவசாயிகள் இன்று ரயிலில் புறப்பட்டு செல்கின்றனர்.

டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளை கடந்த 20 நாட்களுக்கு மேலாக பயிர் கடன் ரத்து, உரிய நிவாரணம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் நேரடியாக வந்து தங்களது ஆதரவை தெரிவித்து போராடி வந்தனர்.

மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் நேரில் வந்து ஆதரவை தெரிவித்தனர்.

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் மட்டுமல்லாமல், நமது அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் உள்ள விவசாயிகளும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த சுமார் 30 விவசாயிகள், அவர்களது ஆதரவை தெரிவிக்க, இன்று காலையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவரும் நிலையில், மத்திய அரசோ விவசாயிகளை பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க தமிழக அரசோ, நமது தமிழக விவசாயிகள்தான் போராடுகின்றனர் என்பதை மறந்து ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் கவனத்தை செலுத்தி வருகிறது.

தமிழக விவசாயிகளின் இந்த போராட்டம் நமது இந்திய அரசுக்கே பாதகமாகுமா..?? இல்லை சாதகமாகுமா..?? என்ற குழப்பம் அனைவருக்கும் உள்ளது.

click me!