Trichy Corporation Election Result 2022 : திருச்சி மாநகராட்சியில் 20 இடங்களில் திமுக முன்னிலை

Published : Feb 22, 2022, 10:22 AM ISTUpdated : Feb 22, 2022, 11:53 AM IST
Trichy Corporation Election Result 2022 : திருச்சி மாநகராட்சியில் 20 இடங்களில் திமுக முன்னிலை

சுருக்கம்

யார் திருச்சி மாநகராட்சியை கைப்பற்றுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி திருச்சி மாநகராட்சியில் 20 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி  வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

கட்சி ஓட்டுகள், ஆளுங்கட்சி என்ற மனநிலையில் மக்கள் அளித்த ஓட்டுகள் தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றியை உறுதி செய்யக்கூடும் என நம்பப்படுகிறது.  இந்த தேர்தலை பொறுத்தமட்டில் தி.மு-க. மட்டுமே சட்டமன்ற தேர்தலில் இடம்பெற்ற கட்சிகளுடன் வலுவான கூட்டணியாக மோதியது. அ.தி.மு-.க. அணியில் த.மா.கா. மட்டுமே இருந்தது. இருப்பினும் பலம் பொருந்திய சில அ.தி.மு.க. வேட்பாளர்கள் களத்தில் அனைத்து வகையிலும் ஆளுங்கட்சியை மோதினர். 

இதுபோன்ற சில இடங்களில் அ.தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக தெரிகிறது. மேலும் தனிப்பட்ட செல்வாக்கு பெற்ற அக்கட்சிகளின் வேட்பாளர்களும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். கடைசி நேரத்தில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் போன்ற இரு இடங்களில் வெற்றிவாய்ப்பினையும் பாதிக்கும் என சொல்கிறார்கள். அ.தி.மு.க. அணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறியதால் கிறிஸ்தவ, இஸ்லாமியர் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வருமா? என்பது சந்தேகமாக இருக்கிறது. திருச்சி மாநகராட்சி தேர்தலை பொறுத்தமட்டில் மேயர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பதில் தேர்தலுக்கு முன்பாகவே தி.மு.க. தெளிவாக இருந்தது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு 15 இடங்களை கொடுத்துவிட்டு மீதம் உள்ள 50 வார்டுகளிலும் அக்கட்சி நேரடியாக களம் இறங்கியது. இதனால் வெற்றிவாய்ப்பு அமோகமாக இருக்கும் என உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர். திட்டமிட்டபடி மேயர் பதவியை கைப்பற்றி விடலாம் என தீர்க்கமாக நம்புகின்றனர். 

எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தற்போதைய நிலவரப்படி திருச்சி மாநகராட்சியில் 20 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
Tamil News Live today 06 December 2025: அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி