விழுப்புறம் மாவட்டத்தின் கோட்டக்குப்பம் நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் என மொத்தம் 210 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 210 பதவிகளில் 2 இடங்களுக்கு போட்டியின்றி நகரசபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன் காரணமாக 208 பதவிகளுக்கு 933 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மணிகண்டன் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை என தெரியவந்துள்ளது. சுயேட்சையாக போட்டியிட்ட மணிகண்டன் தேர்தலில் தனது வாக்கையே செலுத்தவில்லையா அல்லது பதற்றத்தில் வாக்கை மாற்றி செலுத்தினாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தமிழகம் முழுக்க வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்கு கூட வாங்காத சம்பவம் அவர் உள்பட பலரையும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.