திருச்சி விமான நிலையம்; 144 பயணிகளுடன் தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானம்! நிலவரம் என்ன?

By Ansgar R  |  First Published Oct 11, 2024, 8:08 PM IST

Trichy Airport : திருச்சியில் இருந்து 144 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றது.


திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணியளவில் 144 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்டது ஒரு ஏர் இந்தியா விமானம். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்துள்ளார். உடனே திருச்சி நோக்கி அவர் விமானத்தை திருப்பிய நிலையில் தான், விமானத்தின் ஹைட்ராலிக் பகுதியில் கோளாறு இருப்பது விமானிக்கு தெரியவந்துள்ளது. ஆகையால் இப்பொது கிட்டத்தட்ட 2 மணிநேரமாக அந்த விமானத்தை தரையிறக்க முடியாமல் விமானி அந்த விமானத்தை வானத்திலேயே வட்டமிட்டு வருகின்றார்.

விமானத்தில் உள்ள எரிபொருள் குறைந்த பிறகு தான் விமானத்தை தரையிறக்க முடியும் என்றும், அது தான் பயணிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் என்பதால் தான் இப்பொது எரிபொருளை குறைக்க அந்த விமானி போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. விமானத்தின் லாண்டின் கீர் விமானம் மேலே எழும்பியபிறகும் உள்நோக்கி நகராத காரணத்தால் தான் விமானி இப்பொது மீண்டும் அதை தரையிறக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். 

Latest Videos

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? மீண்டும் ஜெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா?

"திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் (ஹைட்ராலிக் ஃபெயிலியர்) திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன் எரிபொருளைக் குறைக்க வான்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. பெரிய விபத்து ஏற்படாமல் இருக்க 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன" என விமான நிலைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

விமானத்தை எந்தவித பாதகமும் இல்லாமல் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க எல்லாவிதமான சாத்தியக்கூறுகளும் இருப்பதால் இன்னும் கொஞ்ச நேரத்தில் விமானத்தில் எரிபொருள் தீரும் நேரத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Mysuru Darbhanga Express : கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு ரயில் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்! பயணிகள் படுகாயம்!

click me!