ஆயுத பூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை தாம்பரம் - தஞ்சை இடையே சிறப்பு மெமோ ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி, வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர் செல்வார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். தலைநகர் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுமார் 7 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகையில் மேலும் 1000 ரூபாய் - உடனே விண்ணப்பிக்கவும்
undefined
சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அனைத்து ரயி்ல்கள், பேருந்துகளும் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியபடியே செல்கிறது. இதனிடையே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சைக்கும், தஞ்சையில் இருந்து தாம்பரத்திற்கும் முற்றிலும் முன்பதிவில்லாத சிறப்பு மெமோ ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து 12 பெட்டிகள் கொண்ட மெமோ சிறப்பு முன்பதிவு இல்லாத விரைவு ரயில் இயக்கப்படும். வெள்ளிக் கிழமை இரவு 11.55 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்படும் ரயில் மறு நாள் காலை 7.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை அடைகிறது. முற்றிலும் முன்பதிவு இல்லாத இந்த ரயில் சேவையை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.