திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி - நோயாளிகள், முதியோர் கடும் பாதிப்பு

First Published May 14, 2017, 3:55 PM IST
Highlights
transport labours union strike


போக்குவரத்து துறை அமைச்சருடன் , ஊதிய உயர்வு, ஓய்வு ஊதியதாரர்களின் பிடித்தம், கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகை ஆகியவை உடனடியாக வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சு வார்த்ததை நடத்தினர்.

4 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை அனைத்தும், தோல்வியில் முடிந்தது. இதனால், நாளை முதல் காலை வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்த தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து, இன்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், 5 கட்ட பேச்சு வார்த்தை நடந்தது.

அதில், அனைத்து தொழிற்சங்கத்தினரும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனால், அவ்வளவு தொகையை உடனடியாக வழங்க முடியாது. படிப்படியாக வழங்கப்படும் என அமைச்சர் கூறினார். இதனால், இந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை தொடங்க இருந்த வேலை நிறுத்தம் இன்று தொடங்கப்பட்டுவிட்டது.

பல்வேறு மாவட்டங்களில், ஆங்காங்கே பஸ்களை நிறுத்திவிட்டு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிமனையில் இருந்து வெளியே கொண்டு வந்த பஸ்கள், மீண்டும் உள்ளே கொண்டு சென்றுவிட்டுவிட்டனர்.  இதனால், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி சென்னை அண்ணா சாலை பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள சென்ட்ரல் போக்குவரத்து பணிமனையை சேர்ந்த அனைத்து பஸ்களும் சாலையில் நிறுத்தப்பட்டுவிட்டன. தொழிலாளர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வேளையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் பலர் சொந்த ஊருக்கு சென்றனர். தற்போது, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால், சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை வருவதற்கும், சென்னை வந்தவர்கள் சொந்த ஊர் செல்லவும் முடியாமல் தவிக்கின்றனர்.

click me!