ஒரு குழந்தையை தத்தெடுக்க தன்னை அனுமதிக்காதது, தான் ஒரு திருநங்கை என்பதாலா?, சென்னை உயிர்நீதிமன்றத்தில் பிரித்திகா மனு தாக்கல்
சில தினங்களுக்கு முன்பு இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை உதவி ஆய்வாளரும், தலைநகர் சென்னையின் காவல்துறை உதவி ஆய்வாளருமாக பணியாற்றி வருகின்ற பிரித்திகா யாஷினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று ஜூன் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில் பல ஆண்டு காலமாக யாரும் இன்றி தனித்து வாழ்ந்து வரும் தனக்கு", ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும். இதற்காக அவர் தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள ஆணையத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததாக அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள் : ஆளுநரின் அதிகாரத்தில் ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாடு.! பழைய டுவிட்டரை தூசி தட்டி அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை
ஆனால் அரசு பணியில் தான் இருந்தும், நான் திருநங்கை என்கின்ற ஒரே காரணத்தினால், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க எனக்கு அதிகாரம் இல்லை என்று அந்த ஆணையத்தினர் எனக்கு பதில் அளித்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார். அதேசமயம் திருநங்கை என்ற காரணத்தினால் ஒருவர் குழந்தையை தத்தெடுக்க முடியாது என்று எந்த சட்டமும் கூறவில்லை என்றும், அரசு பணியில் இருக்கும் தன்னால் ஒரு குழந்தையை எடுத்து வளர்க்க முடியும் என்றும் கூறி அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இன்று ஜூன் 30-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், திருநங்கை பிரித்திகா யாஷினி அளித்த மனுவிற்கான பதிலை வழங்க ஒன்றிய அரசுக்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களில், திருநங்கை பிரித்திகாவிற்கு வெற்றி கிடைக்குமா? என்பது தெரியவாறும். அரசு பணியில் இருக்கும் அவரால் ஒரு குழந்தையை நல்ல முறையில் வளர்க்க முடியும், ஆகையால் அவர் மனுவை ஏற்குமாறு பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம்! 5 மணிநேரத்தில் நடந்தது என்ன?