ஒரே நாளில் புரட்டிபோட்ட ”ஓகி” புயல் - கன்னியாகுமரியில் கடும் சேதம்...!

First Published Nov 30, 2017, 4:40 PM IST
Highlights
Trains to Kanniyakumari have been stopped by the railway administration.


ஓகி புயல் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழையில் ஒரே நாளில் கன்னியாக்குமரி மாவட்டத்தையே புறட்டி போடும்  அளவுக்கு மழை பெய்துள்ளது. 

கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஓகி புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. 

தென் தமிழகத்தில் கடலோர பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என எச்சரித்துள்ளது. 

ஓகி புயல் உருவாகியுள்ளதை அடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தஞ்சை,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது

அதன்படி நேற்று முதல் கன்னியாக்குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும் மின் ஒயர்கள் அறுந்தும் காணப்படுகின்றன. 

இதனால் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலன இடங்களில் தண்ணீர் காடாக காட்சி அளிக்கிறது. 

கன்னியாக்குமரிக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஏராளமான கட்டடங்கள் மீது மரங்கள் விழுந்து இடிந்து விழுந்த வண்ணம் உள்ளன. இவை அனைத்தையும் அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

click me!