
ஒரு ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்தது
1917-ம் ஆண்டு நவம்பர் 30-ந் தேதி தான் ஒரு ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
முதலாம் உலகப்போருக்கு பின்,வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஏற்கனவே புழக்கத்தில் இருந்து வந்த ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்திற்கு பதில், அப்போதைய வெள்ளி நாணய படத்தையும், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படத்தையும் தாங்கி ஒரு ரூபாய் நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது.
ஒரு ரூபாய் நோட்டை மட்டும் இதுவரை ரிசர்வ் வங்கி வெளிஇட்டது இல்லை.அதனால் தான் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்துக்கு பதிலாக, மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து அதில் இடம்பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது ஒரு ரூபாய் நோட்டை மத்திய அரசுதான் வெளியிட்டு வந்துள்ளது