பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகத்தில் ரெய்டு - அதிரடி கிளப்பும் போலீஸார்...!

Asianet News Tamil  
Published : Nov 30, 2017, 04:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகத்தில் ரெய்டு - அதிரடி கிளப்பும் போலீஸார்...!

சுருக்கம்

The cinematic financier who searched for the suicide case in the Ashok Kumar suicide case

அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரான சினிமா பைனான்சியர் அன்புசெழியனின் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

நடிகர் சசிக்குமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். 

அவரின் தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன்தான்  எனவும் அவர் கொடுக்கும் கந்துவட்டி டார்ச்சர் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்து விட்டு அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் அன்புசெழியனுக்கு எதிராக திரையுலகினர் திரண்டு பேட்டியளித்தனர். கந்துவட்டியை ஒழிக்கவேண்டும் என கூக்குரலிட்டனர். 

இதையடுத்து அன்பு செழியன் மீது வழக்குகள் பதியபட்டுள்ளன.இதைதொடர்ந்து பைனான்சியர் அன்புச்செழியன் தலைமறைவானார். அதனால் அவர் தேடப்படும் நபர் என அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில், அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரான சினிமா பைனான்சியர் அன்புசெழியனின் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் எதிரொலி....வெறிச்சோடிய ராமேஸ்வரம் ! - பக்தர்கள் வருகை இன்றி காணப்பட்ட முக்கிய இடங்கள்
திமுக வேட்பாளர் உதவியாளரிடம் ரூ.2 கோடி சிக்கியதா?! மறுக்கும் திமுக வேட்பாளர்...