
Training for ITI students with a monthly stipend of Rs. 14,000 : தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பணியில் இணைய விரும்புபவர்களுக்காக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐடிஐயில் படித்த மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தையும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், 2025-2026-ஆம் ஆண்டிற்கு மாதம் ரூ.14,000/- உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 10.09.2025 அன்று மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான ITI- பிரிவுகளில் (Mechanic Motor Vehicle, Mechanic Diesel. Auto Electrician, Electrician. Fitter & Welder) ரூ.14,000/- உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு. 10.09.2025 அன்று காலை 10:00 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இம்முகாமில், தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.