இனி சீக்கிரம் ஊருக்கு போகலாம்... ரயில்கள் வேகம் மணிக்கு 100 கி.மீ அதிகரிப்பு.. பயண நேரம் 90 நிமிடங்கள் குறைகிறது!!

Asianet News Tamil  
Published : Aug 16, 2017, 03:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
இனி சீக்கிரம் ஊருக்கு போகலாம்... ரயில்கள் வேகம் மணிக்கு 100 கி.மீ அதிகரிப்பு.. பயண நேரம் 90 நிமிடங்கள் குறைகிறது!!

சுருக்கம்

train speed incresed to 100km per hour

சென்னை முதல் மதுரை வரையிலான இரட்டை வழி ரெயில் பாதைப் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதால், ரெயில்களின் வேகம் மணிக்கு 100 கி.மீ. வரை அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், பயண நேரம் 90 நிமிடங்கள் வரை குறையப்போகிறது

சென்னை முதல் மதுரை வரை 497 கி.மீ. தொலைவுக்கு ஒற்றை வழி இருப்புப்பாதை இருந்தது. இதை இரட்டை வழிப்பாதையாக மாற்றும்  பணிகள் நடந்து வந்தன.

திருச்சி-சென்னை இடையிலான இரட்டை வழிப்பாதையின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்த  நிலையில், பணிகள் அனைத்தும் முடிந்து, பயன்பாட்டுக்கு தயாராக இருக்கிறது. இதற்கிடையே திருச்சி-திண்டுக்கல் இடையிலான 20 கி.மீ.் பாதையில் மட்டும் பணிகள் தற்போது நடந்து வருவதால், அந்த பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிந்து விடும்.

அவ்வாறு டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிந்து விட்டால், வழக்கமாக இந்த பாதையில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் வேகத்தை அதிகரிக்கவும், அதிகமான ரெயில்களை இயக்கவும் தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் வஷிஸ்தா ஜோரி கூறியதாவது-

 சென்னை- மதுரை இடையிலான இரட்டை வழித் தடங்களுக்கான பணிகள்அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் முடிந்து விடும். அதன்பின், வழக்கமாகச் செல்லும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும், புதிதாக ரெயில்களும் இயக்கப்படும்.

தற்போது சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயண நேரம் 9 மணிநேரம் ஆக இருக்கிறது, இதில் 90 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, வேகம் அதிகரிக்கப்படும். புதிய தடங்களின் வழியாக செல்லும் ரெயில்கள் வேகம் மணிக்கு 100 கி.மீ. வரை இயக்க முடியும்.

வைகை எக்ஸ்பிரஸ் பயண நேரம் 6 மணி நேரமாகவும், பொதிகை எக்ஸ்பிரஸ் பயண நேரம் 7 மணிநேரமாகவும் குறையும்.

மேலும், திருச்சி பொன்மலை-தஞ்சை இடையிலான 47 கி.மீ தொலைவுக்கான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும். காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையிலான 74கி.மீ. பாதைக்கான பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.

பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.74 கோடியில் ரூ.34 கோடி ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டுள்ளது. 33 ஆள் இல்லாத ரெயில்வே கிராஸிங்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், வழக்கமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரெயில்களில் விரைவில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிடுவதால்,  பெரும்பாலான பயணிகள் தனியார் பஸ்களையும், அரசு பஸ்களையும் நம்பி இருக்கிறார்கள். சென்னை முதல் மதுரை இடையே வாரத்துக்கு 11 முதல் 14 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படடு வருகின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது பயணிகள் கோரிக்கையைாக இருக்கிறது.

இந்நிலையில், ரெயில்களின் வேகம் படிப்படியாக அதிகரிக்கவும், அதேசமயம், பயணிகள் பயன்பெறும் வகையில் அதிகமான ரெயில்களையும், குறிப்பாக குளிர்சாதன வசதி கொண்ட அதிவிரைவு ரெயில்களை அதிகமாக இயக்கவும் ரெயில்வே திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரெயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.
பிரபல இயக்குநரின் அண்ணன் மகள் ரஞ்சனா நாச்சியார்.! விஜயை விமர்சிக்க இதுதான் காரணமா?