ஒகேனக்கல்லில் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது நீர்!!! - சுற்றுலா பயணிகள் குஷியோ குஷி...!!!

First Published Aug 16, 2017, 3:33 PM IST
Highlights
water level increased in hogenakal


பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக  தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. நகரின் பல பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் பெரும்  சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அதாவது கடந்த 1௦ வருடங்களில் இல்லாத அளவிற்கு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுகிறது. இதன் காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, தமிழக எல்லையில் உள்ள  பிலிகுண்டுலு வழியாக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள, ஒகேனக்கல்லுக்கு அதிகளவில் தண்ணீர் வர  தொடங்கியுள்ளது. அதன்படி, வினாடிக்கு 7 ஆயிரம்  கனஅடியாக இருந்த  நீர், நேற்றைய நிலவரப் படி , 11 ஆயிரத்து 500  கன அடியாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து  அதிகரித்து வருகிறது.

நேற்றைய  நிலவரப்படி,மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8  ஆயிரத்து 78  கன அடியாக  இருந்தது. வெளியேற்றம் 500 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 44.59 அடியாக  இருந்தது .

ஒகேனக்களில் நீர்வரத்து  அதிகரித்து  உள்ளதால், இதன் காரணமாக  பிரதான அருவி, சினி  அருவி, ஐந்தருவி  உள்ளிட்ட நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர்  ஆர்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக  சுற்றுலா பயணிகளின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது.

மேலும், பரிசல் சேவையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது 

click me!