சென்ட்ரலுக்கு ரயில்கள் வராது.. ஆவடி, பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்த முடிவு- வெளியான அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Apr 1, 2024, 8:27 AM IST
Highlights

ரயில் தண்டவாளம், சிக்னல் பராமரிப்பு பணிக்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ஒரு சில முக்கிய ரயில்கள், திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், கடற்கரை, ரயில் நிலையங்களில் நிறுத்தப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பராமரிப்பு பணி- ரயில் சேவை மாற்றம்

வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கு முக்கிய ரயில் நிலையமாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது சிக்னல் மற்றும் தண்டவாள பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனை சரிசெய்யும் பணியும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெங்களூர், ஆலப்புழா, ஹௌரா உள்ளிட்ட ரயில்கள் சென்டரலுக்கு பதிலாக ஆவடி, பெரம்பூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படவுள்ளது.

சென்ட்ரல் ரயில் சேவை மாற்றம்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலப்புழையில் இருந்து வரும் அதிவிரைவு ரயில் ஏப்.2-ஆம் தேதி திருவள்ளூருடன் நிறுத்தப்படும். ங்களூரில் இருந்து வரும் மெயில் விரைவு ரயில், ஈரோட்டில் இருந்து வரும் ஏற்காடு விரைவு ரயில் ஏப்.2-ஆம் தேதி ஆவடியுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  ஹௌராவில் இருந்து வரும் விரைவு ரயில் ஏப்.1-ஆம் தேதி சென்ட்ரல் வருவதற்கு பதிலாக சென்னை கடற்கரை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல சென்ட்ரலில் இருந்து ஷாலிமர் செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் ஏப்.3-ஆம் தேதி கடற்கரையில் இருந்து இயக்கப்படும் என்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர், ஈரோடுக்கு ஏப்.2- ஆம் தேதி செல்லும் விரைவு ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலப்புழை-தன்பாத், கொச்சுவேலி-கோரக்பூர், இந்தூர்- கொச்சுவேலி விரைவு ரயில்கள் ஏப்.1, 2 தேதிகளில் சென்ட்ரல் வந்து செல்வதற்கு பதிலாக பெரம்பூர் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cylinder Price : பொது பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை இன்று மீண்டும் குறைந்தது..! எவ்வளவு தெரியுமா.?

ரயில் புறப்படும் இடமும் மாற்றம்

ரயில் எண். 12842 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஷாலிமார் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 03, 2024 அன்று காலை 07.00 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  ரயில் எண். 22649 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் 2024 ஏப்ரல் 02 அன்று இரவு 11.00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!