ரயில் மீது செல்ஃபி - பிளஸ் 1 மாணவன் உடல் கருகி பலி

 
Published : Dec 07, 2016, 07:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
ரயில் மீது செல்ஃபி - பிளஸ் 1 மாணவன் உடல் கருகி பலி

சுருக்கம்

நெல்லையில் ரயில் மீது ஏறி செல்பி எடுத்த பிளஸ் 2 மாணவர், மின்சாரம் தாக்கி உடல் கருகி இறந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மகன் யுவராஜ்(17). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 4ம் தேதி காசிராஜன், நெல்லையில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார்.

அங்கு யுவராஜ், உறவினர் சுரேஷ் என்பவருடன் நெல்லை ரயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு நின்றிருந்த ரயிலை பார்த்ததும், ஆர்வ கோளாறு ஏற்பட்டு, ரயில் பெட்டி மீது வேகமாக ஏறினார்.

உடனே தனது பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து செல்பி எடுக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை மேலே சென்ற அதி உயரழுத்த மின் கம்பியில் பட்டதும் தூக்கி வீசப்பட்ட யுவராஜ் உடல் கருகி கீழே விழுந்தார்.

இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் இறந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!