ஜெயலலிதா மறைவு - தமிழகம் முழுவதும் அதிர்ச்சியில் 66 பேர் சாவு

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 07:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
ஜெயலலிதா மறைவு - தமிழகம் முழுவதும் அதிர்ச்சியில் 66 பேர் சாவு

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த செய்தியை கேட்டு, தமிழகம் முழுவதும்  66 பேர் இறந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம், கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (60). அ.தி.மு.க. தொண்டர். நேற்றுமுன்தினம் இரவு முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த செய்தியை டிவியில் பார்த்ததும் நெஞ்சுவலி ஏற்படடு இறந்தார்.

வாலாஜாபாத் அருகே தென்னேரி கிராமத்தை சேர்ந்த சையத் ரசூல் (70), டி.வி.யில் ஜெயலலிதா மரணம் குறித்த செய்தியை பார்த்ததும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம், கொண்டஞ்சேரியை சேர்ந்த கே.ஏ.வடமலை(77), திருவொற்றியூர் வடக்குமாட வீதியை சேர்ந்த லட்சுமணன் மனைவி பத்மாவதி (58), பொன்னேரி, மேலபட்டரையை சேர்ந்த நைனியப்பன் (40), மீஞ்சூரை அடுத்த தேவதானத்தைச் சேர்ந்த தீனம்மாள் (57), திருவள்ளூரை சேர்ந்த ராகவன் (70) ஆகியோர் ஜெயலலிதா மரண செய்தியை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தனர்.

வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுவை என அனைத்து பகுதியிலும் 66 பேர் இறந்துள்ளதாகதெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

ஒரு மனுஷனை மது என்னென்ன செய்து பாத்தீங்களா! டாஸ்மாக் கடையை இழுத்து மூடுங்கள்! சொல்வது யார் தெரியுமா?
விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார்..! காங்.க்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும்..! பிரவீன் சக்கரவர்த்தி திட்டவட்டம்