பத்திரிகையாளர் சோ.ராமசாமி காலமானார்

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 07:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
பத்திரிகையாளர் சோ.ராமசாமி காலமானார்

சுருக்கம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோ.ராமசாமி (82) மாரடைப்பு காரணமாக காலமானார்.

திரைப்பட நடிகர், வழக்கறிஞர், பத்திரிகையாளர் என்பது உள்ட பல்வேறு முகங்களை கொண்டவர் சோ.ராமசாமி. இவரது புனைப்பெயர் சோ.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

சோ ராமசாமி  1934 அக்டோபர் 5-ல் சென்னையில் ஸ்ரீநிவாசன், ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். 1970ம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார்.

கடந்த 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பின‎ராக இருந்தார். பத்திரிகை துறையின் சிறந்த சேவைக்காக 1985ல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986ல் வீரகேசரி விருதும், 1994ம் ஆண்டு கொயங்கா விருதும், 1998ல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.

இநிலையில், மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோ.ராமசாமி, இன்று அதிகாலை 4.40 மணிக்கு காலமானார்..

சோ.ராமசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஒரு மனுஷனை மது என்னென்ன செய்து பாத்தீங்களா! டாஸ்மாக் கடையை இழுத்து மூடுங்கள்! சொல்வது யார் தெரியுமா?
விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார்..! காங்.க்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும்..! பிரவீன் சக்கரவர்த்தி திட்டவட்டம்