
திநகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்த டிராஃபிக் ராமசாமி முறையிட்ட வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை திநகரிர் உஸ்மான் சாலையில் உள்ள பிரமாண்டமான ஜவுளி கடையான தி சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மின்கசிவு காரணமாகதான் இந்த தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து 15 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் நேற்று முழுவதும் தீயை அணைக்க போராடி வந்தனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதை தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் கட்டிடத்தின் முற்பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் விதிமுறைகள் மீறி கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் இடிக்கப்படும் எனவும் பாரபட்சமின்றி அதிகாரிகள் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே சமூக ஆர்வலர் ராமசாமி முடைகேடாக கட்டப்பட்டுள்ள கட்டடகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், இன்று திநகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்த டிராஃபிக் ராமசாமி முறையிட்ட வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.