கனமழை காரணமாக ஈரோடு அந்தியூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக ஈரோடு அந்தியூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து உபரி நீா் வெளியேறியதை அடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணவி சத்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அன்றே கோட்டைவிட்ட காவல்துறை - பரபர பின்னணி!
தரப்பாலமும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் சாலையில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அந்தியூா் - பவானி சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதை அடுத்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அந்தியூரில் நாளை (அக்.17) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆற்றில் அடித்து செல்லப்பட புதுமண தம்பதி.. நீரில் மூழ்கி பலி… திருமணமான ஒரே மாதத்தில் சோகம்!!
இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தியூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்தியூர் வட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக்/சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு நாளை (அக்.17) ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.