ஆற்றில் அடித்து செல்லப்பட புதுமண தம்பதி.. நீரில் மூழ்கி பலி… திருமணமான ஒரே மாதத்தில் சோகம்!!

By Narendran S  |  First Published Oct 16, 2022, 8:13 PM IST

தேனி அருகே புதுமண தம்பதிகள் உட்பட 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தேனி அருகே புதுமண தம்பதிகள் உட்பட 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் சஞ்சய்.  24 வயதான இவர் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். தேனியில் உள்ள இவரது வீட்டிற்கு அவரது தனது தாய் மாமா ராஜா என்பவர் தனது மனைவியுடன் வந்துள்ளார். ராஜாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவையை சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. திருமணத்துக்கு வர முடியாத சஞ்சய், இன்று தனது வீட்டிற்கு தாய்மாமாவையும் அவரது மனைவியையும் அழைத்ததன்பேரில் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: வெளியானது தலைசிறந்த கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பட்டியல்… தமிழக மருத்துவர்கள் இடம்பிடித்து அசத்தல்!!

Tap to resize

Latest Videos

இதை அடுத்து சஞ்சய் மற்றும் புதுமண தம்பதியினருடன் பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்களுடன் சித்தி மகன் பிரணவ் என்ற சிறுவனும் சென்றுள்ளார். அங்கு பதினெட்டாம்படி கேணியில் குளிக்க நால்வரும் இறங்கியபோது பாறையில் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளனர்.

இதையும் படிங்க: தரமான அரிசி வழங்கினாலும் தரமற்ற அரிசி வழங்குகிறார்கள்... தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!!

இதில் பலத்த காயமடைந்த நால்வரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் பிரணவ் மட்டும் கரையேறி அருகாமையில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து போடி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் போடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!