தரமான அரிசி வழங்கினாலும் தரமற்ற அரிசி வழங்குகிறார்கள்... தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!!

By Narendran S  |  First Published Oct 16, 2022, 5:25 PM IST

மத்திய அரசு தரமான அரிசி வழங்கினாலும் மக்களுக்கு தரமற்ற அரிசியை தமிழக அரசு வழங்குப்வதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். 


மத்திய அரசு தரமான அரிசி வழங்கினாலும் மக்களுக்கு தரமற்ற அரிசியை தமிழக அரசு வழங்குப்வதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு இது தான் சரியான தருணம். குடும்ப ஆட்சி செய்யும் கட்சி பாஜக அல்ல. தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழகத்தில், தந்தை, மகன், மருமகன் ஆட்சி செய்கின்றனர். திமுகவினர் பிரதமர் மோடியை தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர்.

இதையும் படிங்க: இந்த வருட தீபாவளிக்கு 600 கோடி டார்கெட்.. டாஸ்மாக் மது விற்பனையை தட்டி தூக்குவார்களா மதுப்பிரியர்கள்!

Tap to resize

Latest Videos

மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது. மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும், தமிழகத்தில் தரமற்ற அரிசியை தான் திமுக அரசு மக்களுக்கு வழங்குகிறது என்று தெரிவித்தார். முன்னதாக சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க: தமிழகத்தில் 20 ஆம் தேதிவரை கனமழை.. இன்று 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது திமுக அரசை விமர்சித்தார். அவரை தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே மாதத்தில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளனர். சுதந்திர இந்தியாவில், ஒரே நேரத்தில் இத்தனை அமைச்சர்கள் வருவது இது முதல்முறையாகும் என்று தெரிவித்தார். 

click me!