இந்த வருட தீபாவளிக்கு 600 கோடி டார்கெட்.. டாஸ்மாக் மது விற்பனையை தட்டி தூக்குவார்களா மதுப்பிரியர்கள்!

By Raghupati RFirst Published Oct 16, 2022, 3:44 PM IST
Highlights

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் :

தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நாட்களில் மட்டும் பலநூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுத்து வருகிறது.

தீபாவளி பண்டிகை :

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடந்த வருடம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. கடந்தாண்டு நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும்.

இதையும் படிங்க..குழந்தை திருமண விவகாரம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கைது! பரபரப்பு சம்பவம்!

அதாவது தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய வேண்டிய இலக்கு நிர்ணயம் செய்யப்படும். கடந்த வருடம் தீபாவளிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு டார்கெட் :

தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களான சனிக்கிழமை 22 ஆம் தேதி ரூ.200 கோடி, 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரூ.200 கோடி, தீபாவளி பண்டிகை அன்று ரூ.200 கோடி என்ற அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை 40 சதவீதம் சாதாரண ரகம் மதுபானங்கள், 40 சதவீதம் நடுத்தர ரக மதுபானங்கள், 20 சத வீதம் உயர்தர மதுபானங்கள் என்று கடைகளில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..வாழ்நாள் முழுவதும் அதிபராகும் ஜின்பிங்! கம்யூனிஸ்ட் மாநாட்டில் எல்லாமே தயார்! கடைசியில் எல்லாமே போச்சா!

click me!