மருத்துவ படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் நாளை வெளியீடு.. கலந்தாய்வு குறித்து அறிவிப்பு..

Published : Oct 16, 2022, 01:34 PM IST
மருத்துவ படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் நாளை வெளியீடு.. கலந்தாய்வு குறித்து அறிவிப்பு..

சுருக்கம்

தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. ஒமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் நாளை காலை 9 மணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிடுகிறார்.  

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.  அதனை தொடர்ந்து தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கி அக்.6 ஆம் தேதி வரை நடைபெற்றது. 

மேலும் படிக்க: மருத்துவ படிப்புகளுக்கு செப்.22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்... அக்.3 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு!!

நீட் தேர்வில் தகுதிப் பெற்ற மாணவர்கள் http://tnhealth.tn.gov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக மருத்துவ படிப்பு விண்ணப்பித்தனர். இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியலை நாளை காலை 9 மணிக்கு ஒமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிடுகிறார்.

மருத்துவ கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, இந்த ஆண்டு கலந்தாய்வில் பதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்ததும், சம்பந்தப்பட்ட மாணவர் அந்த இடத்துக்கான அனைத்து கட்டணத்தையும், மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவிடம் செலுத்திவிட வேண்டும்.

மேலும் படிக்க: மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்.. கலந்தாய்வு குறித்து முக்கிய தகவல்..

PREV
click me!

Recommended Stories

தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S
அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்வதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது..! எடப்பாடி பழனிசாமி சூளுரை