தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரே ஆண்டில் இவ்வளவு கட்டணம் உயர்வா..? அலறி துடிக்கும் அன்புமணி

By Ajmal Khan  |  First Published Oct 16, 2022, 12:53 PM IST

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வு அநீதியானது என தெரிவித்துள்ள அன்புமணி உடனடியாக கட்டணத்தை குறைக்க ஆணையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


மருத்துவ கல்லூரி கட்டணம் உயர்வு

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண உயர்விற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,   தமிழ்நாட்டில்  தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை உயர்த்தி கட்டண நிர்ணய குழு ஆணை பிறப்பித்திருக்கிறது. தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ. 29.40 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அநீதியானது! என தெரிவ்வித்துள்ளார்.தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கல்லூரிகளுக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என மருத்துவ ஆணையம் ஆணையிட்டிருந்தது. அதை நீதிமன்றங்கள் வாயிலாக தனியார் கல்லூரிகள் தகர்த்ததை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயலவில்லை என கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

தேர்தலில் திமுகவை தோற்கடிக்க திட்டமிட்டோமா..? நடந்தது என்ன..? திருமாவளவன் கூறிய ரகசிய தகவல்

ஏழை மாணவர்கள் பாதிப்பு

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணம் தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் திருத்தப்பட்ட  குறிப்பாணையை வெளியிடும் வரை இப்போதுள்ள கட்டணமே  தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஆணையிட்ட நிலையில் இந்த கட்டண உயர்வு நீதிமன்ற அவமதிப்பாகி விடும்! தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இப்போது வசூலிக்கப்படும் கட்டணமே  ஏழை மற்றும் நடுத்தர மக்களால் எட்டிப் பிடிக்க முடியாதது எனும் நிலையில்,  அதை மேலும் மேலும் உயர்த்துவது நியாயமற்றது. பணக்காரர்களுக்கு மட்டும் தான் மருத்துவக் கல்வி என்ற நிலையை அது உருவாக்கி விடும் என கூறியுள்ளார். எனவே தனியார் கல்லூரிகளிலும் ஏழை மாணவர்கள் பொருளாதார சுமையின்றி மருத்துவம் படிக்கும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு இந்த கட்டண உயர்வு பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதை  உடனடியாக  திரும்பப் பெறுவதற்கு  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜகவுடன் திமுக சமரசமாக சென்று விட்டதா.? நாடாளுமன்ற தேர்தலில் இலக்கு என்ன.?மு க ஸ்டாலின் கூறிய அதிரடி பதில்கள்


 

click me!