வெளியானது தலைசிறந்த கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பட்டியல்… தமிழக மருத்துவர்கள் இடம்பிடித்து அசத்தல்!!

By Narendran S  |  First Published Oct 16, 2022, 6:25 PM IST

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட 2021 ஆண்டுக்கான உலக கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்களில் தலைசிறந்து விளங்கும் 2 சதவீதம் பேரின் தரவரிசை பட்டியலில் தமிழக மருத்துவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. 


அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட 2021 ஆண்டுக்கான உலக கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்களில் தலைசிறந்து விளங்கும் 2 சதவீதம் பேரின் தரவரிசை பட்டியலில் தமிழக மருத்துவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் இருக்கும் உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் 2021 ஆண்டுக்கான உலக கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்களில் தலைசிறந்து விளங்கும் 2 சதவீதம் பேரின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தரமான அரிசி வழங்கினாலும் தரமற்ற அரிசி வழங்குகிறார்கள்... தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!!

Tap to resize

Latest Videos

அந்த பட்டியலின் படி, முதலிடத்தில் சந்தோஷ் ஹொனவர், 2 ஆவது இடத்தில் பிலிப் தாமஸ் ஆகியோரும் 3 ஆவது இடத்தில் விரேந்தர் சங்வான், 4 ஆவது இடத்தில் ரோகித் ஷெட்டி, 5 ஆவது இடத்தில் முத்தையா ஸ்ரீனிவாசன், 6 ஆவது இடத்தில் மருத்துவர் முஹம்மது ஜாவித் அலி ஆகியோரும் இடம்பிடித்து இருக்கின்றனர். 7 ஆவது இடத்தில் சாவித்ரி ஷர்மா, 8 ஆவது இடத்தில் அமோத் குப்தா, 9 ஆவது இடத்தில் விஷாலி குப்தா, 10 ஆவது இடத்தில் மருத்துவர் வினோத் குமார் ஆகியோரும் 11 ஆவது இடத்தில் நம்ரதா ஷர்மா, 12 ஆவது இடத்தில் பிரஷாந்த் கார்க், 13 ஆவது இடத்தில் ஜில் கீஃபீ, 14 ஆவது இடத்தில் குல்லபல்லி ராவ் ஆகியோரும் இடம்பிடித்து உள்ளார்கள்.

இதையும் படிங்க: இந்த வருட தீபாவளிக்கு 600 கோடி டார்கெட்.. டாஸ்மாக் மது விற்பனையை தட்டி தூக்குவார்களா மதுப்பிரியர்கள்!

15 ஆவது இடத்தில் சுவாதி கலிகி, 16 ஆவது இடத்தில் ரோகித் கன்னா, 17 ஆவது இடத்தில் லலிதா பிராசன்னா, 18 ஆவது இடத்தில் ரத்தினம் சிவக்குமார், 19 ஆவது இடத்தில் ஜோதிர்மே பிஸ்வாஸ், 20 ஆவது இடத்தில் மிட்டனமல்லி ஸ்ரீதர், 21 அக்‌ஷய் கோபிநாதன் நாயர், 22 ஆவது இடத்தில் ராஜீவ் ராமன், 23 ஆவது இடத்தில் வெங்கடேஷ் பிரச்சன்னா, 24 ஆவது இடத்தில் சூசன் ஜேக்கப், 25 ஆவது இடத்தில் ரோகித் சக்சேனா ஆகியோர் உள்ளனர். இதில் ஏராளமான இந்திய மருத்துவர்கள் இடம்பெற்று உள்ளார்கள். குறிப்பாக இடம் இடம்பெற்ற மருத்துவர்கள் ஸ்ரீனிவாசன், ரத்தினம் சிவக்குமார், வெங்கடேஷ் பிரசன்னா, லலிதா பிரசன்னா ஆகியோர் 4 பேரும் மதுரையில் புகழ்பெற்ற அர்விந்த் கண் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!