
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முதல் பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாள்களிலும் நோன்பிருந்து ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். மேலும் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜானுக்கு நோன்பு தொடங்கப்படுவது வழக்கம். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பை தொடங்குவார்கள். அதன்படி இஸ்லாமியர்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி ரம்ஜான் நோன்பைத் தொடங்கினர்.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முதல் பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் வேலூர், மதுரை , திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் முதல் பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.