நாமக்கல்லில் நாளை திமுக செயற்குழு கூட்டம்; கட்சி பணிகள் குறித்து விவாதிக்க முடிவு...

 
Published : Dec 30, 2017, 10:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
நாமக்கல்லில் நாளை திமுக செயற்குழு கூட்டம்; கட்சி பணிகள் குறித்து விவாதிக்க முடிவு...

சுருக்கம்

Tomorrow DMK Executive Meeting in Namakkal Deciding to discuss party tasks ...

நாமக்கல்

நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், கட்சி பணிகள் குறித்து விவாதிக்க உள்ளனராம்.

இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பார். இளங்கோவன் நேற்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், "நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வரும் 31-ஆம் தேதி (அதாவது நாளை) காலை 10 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ரா. உடையவர் தலைமைத் தாங்குகிறார்.  இக்கூட்டத்தில் 2018-ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா குறித்தும்,  கட்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

எனவே, இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
 

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்