பல நாள்களாக ஆடுகளை திருடி விற்றுவந்த மூவர் கைது; ரூ.30 ஆயிரம் பறிமுதல்; திருடர்கள் சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சி....

 
Published : Dec 30, 2017, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
பல நாள்களாக ஆடுகளை திருடி விற்றுவந்த மூவர் கைது; ரூ.30 ஆயிரம் பறிமுதல்; திருடர்கள் சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சி....

சுருக்கம்

Three arrested for stealing sheep Rs 30 thousand confiscated The thieves are so happy people are happy ....

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் பல நாள்களாக ஆடுகளைத் திருடி விற்று அட்டூழியத்தில் ஈடுபட்ட மூவரை காவலாளர்கள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, மணல்மேடு காவல் சரகத்துக்கு உள்பட்டவை கல்யாணசோழபுரம், கேசிங்கன் பகுதிகள்.

இங்கு கொட்டகைகளில் கட்டி வைத்திருக்கும் ஆடுகளை மர்ம நபர்கள் அடிக்கடி திருடிச் சென்றுவிடுகின்றனர் என்று அப்பகுதி மக்கள் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப் பதிந்து  விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், ஆடுகளைத் திருடி விற்பனை செய்து வந்த மயிலாடுதுறை அருகேயுள்ள உத்திரங்குடியைச் சேர்ந்த வினோத் (17), மனோஜ் (18), சீர்காழி அருகேயுள்ள தொழுதூர், கற்கோயில் பகுதியைச் சேர்ந்த ப. பார்த்தீபன் (24) ஆகிய மூன்று பேரையும் காவலாளர்கள் நேற்று கைது செய்தனர்.

மேலும், ஆடுகளை விற்ற பணமான ரூ.30 ஆயிரத்தையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

இத்தனை நாள்களாக ஆடுகளை திருடி வந்த மூவரையும் காவலாளர்கள்  கைது செய்ததை அறிந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!