இனி தக்காளி ரசம், குழம்பு எல்லாத்தையும் மறந்துட வேண்டியது தான்.. ஏன்னா விலை அப்படி

By manimegalai aFirst Published Oct 10, 2021, 8:59 PM IST
Highlights

தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி 65 ரூபாயை எட்டி உள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி 65 ரூபாயை எட்டி உள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

எப்போதும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஏதாவது ஒன்று விலை ஏறி மக்களை அதிர வைக்கும். கடந்த காலங்களில் இதற்கு மிக சிறந்த உதாரணமாக வெங்காயத்தை கூறலாம். இப்போது அந்த பெருமையை மெல்ல, மெல்ல தனதாக்கி கொண்டு வருகிறது தக்காளி.

தக்காளி இல்லாமல் சமையலே இல்லை. ஆனால் அது இனி நடந்துவிடுமோ என்று எண்ணும் அளவுக்கு விலை உச்சத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 18 ரூபாய் ஒரு கிலோ தக்காளி என்பது மாறி இப்போது ஒரு கிலோ 65 ரூபாயை எட்டி இருக்கிறது.

தொடர் மழை, விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு என்று காரணங்கள் அடுக்கப்பட்டாலும் 65 ரூபாய் என்று புலம்பி தவிக்கின்றனர் இல்லத்தரசிகள். மழை தொடர்ந்து நீடிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் தக்காளி மட்டுமல்ல… அனைத்து காய்கறிகளின் விலையும் அடுத்து வரக்கூடிய நாட்களில் உயரக்கூடும் என்று அதிர்ச்சி தருகின்றனர் வியாபாரிகள்.

click me!