மக்களே கவனம்… அதிகரிக்கும் கொரோனா பலி…! சென்னையிலும் உயர்வு

By manimegalai a  |  First Published Oct 10, 2021, 8:12 PM IST

தமிழகத்தில் 1329 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


சென்னை: தமிழகத்தில் 1329 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விவரங்களை நாள்தோறும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிட்டு உள்ள விவரம் வருமாறு:

இன்று புதியதாக 1329 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக 26,78,265 ஆக பாதிப்பு எண்ணிக்கை இருக்கிறது. சென்னையில் இன்று 171 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இது நேற்றைய தினத்தை விட அதிகம்.

கோவையில் 132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 35,783 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு நாளில் 1436 பேர் குணமாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக 26, 26,352 பேர் குணமாகி உள்ளனர். இன்னமும் 16,130 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று கூறப்பட்டு உள்ளது.

click me!