
மத்திய அரசு கொண்டுவரும் தேசிய மருத்துவக் கமிஷன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ கவுன்சிலை அமைப்பதற்கான மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு கடந்த 13 ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழக்கியது. இந்த புதிய ஆணையத்தின்மூலம் 4 தன்னாட்சி வாரியங்களை அமைத்து இளங்கலை, முதுநிலை பாடத்திட்டம், கல்வி நிறுவன மதிப்பீடு, மருத்துவர்கள் பதிவீடு போன்றவற்றை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதாவை நாடாளுமன்ற பரிசீலனை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவரும் தேசிய மருத்துவக் கமிஷன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்திய மருத்துவ சங்க தேர்வு தலைவர் சி.என்.ராஜா ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது மத்திய அரசு கொண்டு வரும் தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவை அரசு திரும்பெற வலியுறுத்தி நாளை ஒருநாள் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.