இன்று 9 மணிக்கு வானில் நிகழும் அற்புதம்!

By manimegalai aFirst Published Dec 15, 2018, 7:34 PM IST
Highlights

இன்று சரியாக 9 மணி முதல் "விர்ட்டினியன்" வால் நட்சத்திரத்தை இந்தியா முழுவதும் பார்க்கலாம் என வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இன்று சரியாக 9 மணி முதல் "விர்ட்டினியன்" வால் நட்சத்திரத்தை இந்தியா முழுவதும் பார்க்கலாம் என வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் ஒரு முக்கியமான தகவலை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான செல்வேந்திரன் கூறியதாவது-

"விண்வெளியில் அவ்வப்போது சில அதிசய நிகழ்வுகள் நடக்கிறது. அந்த வகையில் தற்போது  வால் நட்சத்திரங்களின் நகர்வு நடைபெற உள்ளது. தற்போது "46 பி" என்ற "விர்ட்டினியன்" வால் நட்சத்திரம், பூமிப் பாதையில் நகர்ந்து வர உள்ளது.

இதனை  இன்று அதாவது டிசம்பர் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் 17-ஆம் தேதி வரை, காணமுடியும். இந்த வால் நட்சத்திரம் பூமிப்பாதையில் வலம் வரும். வட கிழக்கு திசையில், நீல நிறத்தில் சுடர் விட்டு நகரும்.

இந்த அரிய நிகழ்வை, இந்தியா முழுவதும், வெறும் கண்ணால் பார்க்கலாம்.

மேலும் டிசம்பர் 15-ஆம் தேதி, இரவு 9 மணி, டிசம்பர் 16-ல், இரவு 8 மணி, வரையிலும்  டிசம்பர் 17-ஆம் தேதி, இரவு 7 மணி முதல் இந்த வால் நட்சத்திரத்தைக் காணலாம்" என்று கூறியுள்ளார். எனவே இந்த அறிய நிகழ்வை பலர் ஆயத்தமாகி வருகிறார்கள். 

click me!