Tamilnadu Rains : தமிழகத்தில் இன்று மழை பெய்யும்.. வானிலை மையம் வெளியிட்ட ‘சூப்பர்’ நியூஸ் !!

Published : Apr 05, 2022, 01:23 PM IST
Tamilnadu Rains : தமிழகத்தில் இன்று மழை பெய்யும்.. வானிலை மையம் வெளியிட்ட ‘சூப்பர்’ நியூஸ் !!

சுருக்கம்

இன்று தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பல்வேறு இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தமிழக உள் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி  மற்றும்  வெப்பசலனம் காரணமாக, இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நாளை உள் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்யாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் வருகிற 7-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை - வானிலை :

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும்.  ஏப்ரல் 06-ம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில்  ஓர் மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.  அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!
அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. குலுக்கல் முறையில் காரைத் தூக்கிய அஜித்! டிராக்டர் வென்ற குலமங்கலம் காளை!