
தென்னக ரயில்வே சார்பில் கோவையில் இருந்து பெங்களூருக்கு ‘டபுள் டக்கர்’ எனப்படும் இரண்டடுக்கு இருக்கை வசதிகளுடன் கூடிய பெட்டிகள் கொண்ட ‘உதய் எக்ஸ்பிரஸ்’ ரயில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்க விழா கோவை ரயில்நிலையத்தில் நடைபெற்றது. மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜென் கோஹெய்ன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
எப்போது எங்கிருந்து புறப்படு என தெரியுமா..?
இந்த ரயில், திங்கட்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் காலை 5.45 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு,சேலம் மார்க்கமாக மதியம் 12.40 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.இது மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
மினி டைனிங் ஹால்,தானியங்கு உணவு வழங்கும் எந்திரம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் அடங்கியுள்ளன.
இன்று நடந்த இந்த துவக்க விழாவில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், ஏ.பி.நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதியதாக தொடங்கப்பட்ட இந்த ரயிலால் கோவை மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.