சேலம் கே.ஆர்.தோப்பூர் துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து..!

 
Published : Jun 08, 2018, 03:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
சேலம் கே.ஆர்.தோப்பூர் துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து..!

சுருக்கம்

caught fire in power plant in selam

சேலத்தில் உள்ள கே.ஆர்.தோப்பூர் துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது

இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தவாறு காணப்படுகிறது.துணை மின் நிலையத்தில் ஏற்பட்டு உள்ள  பயங்கர தீ  விபத்து காரணமாக அப்குதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இது குறித்து  தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சுமார் ஐந்து தீயணைப்பு வண்டியுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பெரும் போராட்ட்த்திற்கு பிறகு தற்போது தான் தீயை அணைத்து உள்ளனர்.

இன்று காலை நடைப்பெற்ற இந்த சம்பவத்தால், தீயணைப்பு வீரர்கள் காலை முதலே பெரும்பாடுபட்டு தீயை  அணைத்துள்ளனர்

இந்த துணை மின் நிலையம் தான் சேலம் மாநகரதிற்கே மின்சப்ளை செய்வது என்பது  குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், இன்று ஏற்பட்ட திடீர் தீயால் சேலம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதன்  காரணமாக பொதுமக்கள் பெரும்  சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!
சீமானின் பேச்சை ரசித்து கேட்ட தொண்டரை கழுத்தை பிடித்து தள்ளிய நிர்வாகிகள்.. நாதக நிகழ்ச்சியில் பரபரப்பு..