தேர்தல் நடத்தை விதி..கோவிலில் சிறப்பு வழிபாடு ,அன்னதானம் நடத்த தடை.. அறிவித்த தமிழக அரசு..

Published : Feb 03, 2022, 07:33 AM IST
தேர்தல் நடத்தை விதி..கோவிலில் சிறப்பு வழிபாடு ,அன்னதானம் நடத்த தடை.. அறிவித்த தமிழக அரசு..

சுருக்கம்

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.  

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை. இவர் 1909 ஜனவரி 14-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். நாவல், கட்டுரை, நாடகம் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் இன்று வரை பலராலும் வாசிக்கப்படுகிறது. தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுடைய இவர் ஒரு இதழாளர் மற்றும் மிகச் சிறந்த பேச்சாளர் ஆவார்.

திராவிட முன்னேற்ற கழகம் என்று தனிக் கட்சியை தொடங்கினார். இந்திய அரசியல் தளத்தில் ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி’ என்பதை முன்வைத்தவர்.பிரதான ஆளுமையாக திகழ்ந்த இவர், 1969 பிப்ரவரி 3-ம் தேதி காலமானார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதியான இன்று அண்ணாநினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.ஏனெனில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்த அறிவிப்பில் “தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.இதன் காரணமாக கடந்த 26-ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாள் என்பதாலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதிக்க இயலாது” என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!