இன்றே கடைசி நாள்…

Asianet News Tamil  
Published : Dec 23, 2016, 08:40 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
இன்றே கடைசி நாள்…

சுருக்கம்

தர்மபுரி,

கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்படாமல் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களின் நேர்க்காணலுக்கான அழைப்பாணையை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு இன்றே கடைசி நாளாகும்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:–

“தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் நிரப்படாமல் உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு தர்மபுரி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல், சேலத்தில் வருகிற 26–ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.

சேலம் 4–ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் இந்த நேர்காணல் நடத்தப்படுகிறது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்.

இந்த நேர்காணலுக்கு விண்ணப்பித்து இதுவரை அழைப்பாணை கிடைக்காதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதேபோல் இன்று மாலை வரை அந்தந்த மண்டல இணை இயக்குனர் அலுவலகங்களிலும் நேர்முக அழைப்பாணைகளை பெற்றுக் கொள்ளலாம். நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத்தேர்வு நடைபெறும் வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்று அதில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

PREV
click me!

Recommended Stories

சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணிக்கு 210 இடங்கள் கன்ஃபார்ம்.. ஆளும் திமுகவை அலறவிடும் இபிஎஸ்
4 லட்சம் ஆசிரியர்களுக்கு துரோகம்.. திமுக அரசு பழிவாங்கிவிடுச்சு.. அடுத்த ஆட்சியில் தீர்வு.. சொல்வது யார் தெரியுமா?