டிஎன்பிஎஸ்சி விவகாரம்….அதிமுக வுக்கு தலைகுனிவு….பாமக ராமதாஸ் அதிரடி

First Published Dec 23, 2016, 6:39 AM IST
Highlights


டிஎன்பிஎஸ்சி விவகாரம்….அதிமுக வுக்கு தலைகுனிவு….பாமக ராமதாஸ் அதிரடி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறி அவர்களின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது அதிமுக அரசின் சர்வாதிகார, ஊழல் மற்றும் முறைகேடான போக்குக்கு மரண அடியாக அமைந்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் நடந்த முறைகேடுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், மற்றவர்களும் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய உறுப்பினர்கள் எவரும் இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளை பின்பற்றி நியமிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக முறையாக கலந்தாய்வுகள் செய்யப்படவில்லை. உறுப்பினர்களுக்கு முறையான தகுதிகள் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதையும் அதுமட்டுமின்றி, இராமமூர்த்தி என்ற உறுப்பினரை இந்த பதவிக்கு மீண்டும் பரிசீலிக்கக் கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எந்த சட்டத்தையும் மதிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போல தான் தோன்றித்தனமாக செயல்பட்டு வரும் தமிழக அரசு இனியாவது திருந்த வேண்டும் எனவும் ஆளுங்கட்சி வழக்கறிஞர்களையும், ஊழலுக்கு உதவிய அதிகாரிகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக நியமிக்கும் போக்கை கைவிட்டு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவை அமைத்து அதன் பரிந்துரைப்படி உறுப்பினர்களை நியமிக்க அரசு முன்வர வேண்டும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

tags
click me!