
கச்சத்தீவு அந்தோணியார் ஆலயம் இன்று திறப்பு….100 பேர் படகில் பயணம்…
கச்சத்தீவில் 1 கோடி ரூபாய் செலவில் இலங்கை அரசால் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோணியார் ஆலயத் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
மத்திய அரசு அனுமதி அளித்ததன் பேரில் இந்த விழாவில் பங்கேற்பதற்காக பங்கு தந்தைகள் சகாயராஜ், சந்தியா, ஜெகன் உள்பட 5 பங்கு தந்தைகளும், 5 கன்னியாஸ்திரிகளும், மீனவர்கள் சங்கத் தலைவர்கள் ஜேசு, எமரிட், போஸ், அல்போன்ஸ் மற்றும் மீனவர்கள் உள்பட 100 பேர் 3 படகுகளில் இன்று அதிகாலை அந்தோணியார் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர்..
இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் பக்தர்கள் செல்லும் படகுகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். ஆலய திறப்பு விழா மற்றும் அர்ச்சிப்பு முடிந்ததும் இன்று பகல் 12 மணிக்கு பக்தர்கள் அனைவரும் மீண்டும் கச்சத்தீவில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வந்து சேர்வார்கள்..
சிகரெட், மது மற்றும் வர்த்தகரீதியான பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.