மத்திய குழு இன்று சென்னை வருகை…வர்தா புயல் சேதங்களை பார்வையிடும்….

First Published Dec 23, 2016, 5:25 AM IST
Highlights


மத்திய குழு இன்று சென்னை வருகை…வர்தா புயல் சேதங்களை பார்வையிடும்….

தமிழகத்தில் வர்தா புயலால் பாதிக்‍கப்பட்ட பகுதிகளை பார்வையிட 8 பேர் கொண்ட மத்திய குழு, இன்று சென்னை வருகை தரும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் O. பன்னீர்செல்வம், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, வர்தா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்‍கு நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும், சேதங்களை சீரமைக்‍க 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்

 உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார். மேலும், புயலால் பாதிக்‍கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவை விரைந்து அனுப்புமாறும் முதலமைச்சர் கோரிக்‍கை விடுத்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் வர்தா புயலால் பாதிக்‍கப்பட்ட பகுதிகளை பார்வையிட, 8 பேர் கொண்ட மத்திய குழு, இன்று சென்னை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக்‍ குழுவினர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்‍கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்த விவரங்களை அறிக்‍கையாக மத்திய அரசிடம் அளிப்பார்கள்.

click me!