
தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீட்டில் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து அவரை தலைமை செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய தமிழக அரசு தற்போது ச்ஸ்பெண்ட் செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டு சார்ஜ் ஷீட் ஃபைல் செய்யப்பட்டால் கைதாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வரலாற்றில் இல்லாத கேவலமான நிலைக்கு தலைமை செயலகத்தில் ரெய்டு நடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு ராமமோகன் ராவின் செயல்பாடுகளே காரணம் .ஆரம்பம் முதலே அவர் தப்பாகவே இயங்கினார். அதனாலயே அவர் மற்ற சீனியர்களை தாண்டி குறுக்கு வழியில் முன்னேறினார்.
நேற்று நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ராமமோகன ராவின் வீட்டில் ஏராளமான ஆவணங்கள், நகை பணம் சிக்கியுள்ளது. சேகர் ரெட்டிக்கும் ராம மோகனராவின் நட்புக்குமான பல தகவல்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ள நிலையில் சேகர் ரெட்டி அவரது கூட்டாளிகள் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராம் மோகன் ராவ் தலைமை செயலாளர் பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டார். பின்னர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். பொதுவாக காத்திருப்போர் பட்டியலில் தான் வைக்கப்படுவார். ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ராம் மோகன் ராவும் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய ஆட்சிப்பணி அதிகாரி என்பதால் கைது நடவடிக்கை அவ்வளவு எளிது அல்ல. ஆகவே அதற்கான நடைமுறைகள் காரணமாக கைது நடவடிக்கை வருமா வராதா என்பது போகப்போகத்தான் தெரியும்.