மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி மறியல் செய்த 30 பேர் கைது…

 
Published : Dec 23, 2016, 08:36 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி மறியல் செய்த 30 பேர் கைது…

சுருக்கம்

தர்மபுரி,

நல்லம்பள்ளியில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 60–க்கும் மேற்பட்டவர்களிடம் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல இலட்ச ரூபாய் பெற்றுள்ளனர். மேலும், பணத்தைப் பெற்றவர்கள் வெளிநாட்டு வேலை வாங்கித் தராமால் ஏமாற்றியுள்ளனர். பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து பணத்தை கொடுத்தவர்கள் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், “வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கொடுத்த பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும்” என்று கேட்டிருந்தனர்.

இது தொடர்பாக நேற்று நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டு வந்தனர்.

அப்போது மனு அளிக்க வந்தவர்களில் பலர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்புடன் காணப்பட்டது.

இந்த சாலை மறியல் குறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை காவலாளர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

அப்போது காவலாளர்களுக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே இழுபறி ஏற்பட்டது. இதில் ஒரு பெண்ணுக்கு கையில் பலத்த காயமும் ஏற்பட்டது.

இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!