கனமழை காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்தசூழலில் தமிழகத்தில் டிசம்பர் 3-ந்தேதி வரையில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,தேனி,நெல்லை,திண்டுக்கல்,கடலூர்,ராமநாதபுரம்,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருவள்ளூர்,தூத்துக்குடி,மதுரை,சிவகங்கை பொன்ற மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்றே இன்று (30 நவம்பர்) விடுமுறை என்று அறிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது