TN Rains : தமிழகத்தில் இன்று.. 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

By Raghupati R  |  First Published Dec 5, 2021, 6:41 AM IST

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.


வடகிழக்கு பருவமழை காலமான தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. எனவே 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

Latest Videos

undefined

அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான  இன்று கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில இடங்களில் பனி மூட்டம் நிகழ்வதால், நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

 என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை மறுதினம் ஒருநாள் மட்டும் அவ்வாறு வறண்ட வானிலை இருக்கும் என்றும், அதற்கு மறுநாள் (8-ந் தேதி) மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் 8-ந் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த ‘ஜாவத்' புயல் வலுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையோரத்தில் நிலைக்கொள்ளும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

click me!