தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி, கோவை, திருப்பூர் ,ஈரோடு ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,திருப்பத்தூர், சேலம் ,நாமக்கல், கள்ளக்குறிச்சி ,திண்டுக்கல், தேனி, தென்காசி ,மதுரை ,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகளுக்கு..சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?
வருகிற செப்டம்பர் 1ம் தேதி (வியாழக்கிழமை) நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு ,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் ,நாமக்கல் ,கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் ,தேனி ,தென்காசி ,மதுரை, கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,திருச்சி , பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ,ஈரோடு ,சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ,திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 3ம் தேதி (சனிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!
இன்று குமரிக்கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கேரளா கடலோர பகுதிகள் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !