தமிழக அரசின் முடிவுக்கு பல்கலைக்கழகங்கள் கட்டுப்பட வேண்டும்.! ஆளுநருக்கு செக் வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Aug 30, 2022, 2:00 PM IST
Highlights

திராவிட முன்னேற்றக் கழக அரசு "துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும்” மசோதைவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறோம். ஆகவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும், துணை வேந்தர்களாகிய நீங்கள் எல்லாம் செயல்பட வேண்டும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 
 

துணை வேந்தர்கள் மாநாடு

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  அண்ணா பலைகலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் அறிவுக் கருவூலங்களாக விளங்கக்கூடிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களான உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் சந்திப்பதில் உங்களோடு உரையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தின் அறிவின் அடையாளங்களாக திகழக்கூடியவர்கள் நீங்கள்! உங்களது சிந்தனையை - ஆற்றலை தமிழ்நாட்டு இளைய சமுதாயத்துக்கு கொண்டு சேர்க்கும் மகத்தான பணியில் நீங்கள் உங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக உங்களை நான் மனமார வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. இதில் விடுதலைக்கு முன் உருவாக்கப்பட்டவை இரண்டு பல்கலைக்கழகங்கள்தான். ஒன்று சென்னைப் பல்கலைக் கழகம்1857-ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. இரண்டு சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மற்றபடி  19 பல்கலைக்கழகங்களும், 1967-க்குப் பிறகு அதாவது, திராவிட அரசுகள் அமைந்த இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டவை| தமிழ்நாடு, உயர்கல்வியில் எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பதற்கு இதுவே மிகமிக முக்கிய சான்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் சிறந்த கல்லூரிகள்

தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள் இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில் உள்ளது. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது.. தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில், 10 தமிழ்நாட்டில் உள்ளது. தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது. தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில், 11 தமிழ்நாட்டில் உள்ளது. 100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில், 8 தமிழ்நாட்டில் உள்ளது. 40 பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளது. 30 சட்டக் கல்லூரிகளில், 2 தமிழ்நாட்டில் உள்ளது. 30 கட்டடக் கலைக் கல்லூரிகளில், 6 தமிழ்நாட்டில் உள்ளது. இப்படி புள்ளிவிவரங்களை நான் சொல்லிக் கொண்டே போகலாம், கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சியினுடைய ஆட்சிக் காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்கெல்லாம் காரணமாக அமைந்திருக்கிறது. 

கல்லூரிகளில் சிறந்த கட்டமைப்பு

ஒருவருக்குக் கல்வியை மட்டும் கொடுத்துவிட்டால், அது மிகப்பெரிய சொத்தாக அவருக்கு அமைந்துவிடும் அத்தகைய கல்விச் சொத்தை உருவாக்கும் இயக்கமாக, எப்போதும் திராவிட இயக்கம் இருந்துள்ளது. அனைவருக்கும் கல்வி அவர்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிடக் கொள்கை! உயர்கல்வியால், ஒருவருக்குச் சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கிறது. வேலை கிடைக்கிறது வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. சமூக வாழ்வில் புகழ் கிடைக்கிறது. இவை அனைத்துக்கும் உயர்கல்வியே அடிப்படையாக அமைகிறது. அதனால்தான். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மிக அதிகமான உயர்கல்வி நிறுவனங்கள் அறிவியல் கல்லூரிகளாக பொறியியல் கல்லூரிகளாக, மருத்துவக் கல்லூரிகளாக சிறந்த கட்டமைப்பு வசதியுடன், தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன என்பதில் எல்லோரும் பெருமைப்படுப்படுகிறோம். 

கொடநாடு கொலை வழக்கு...! சசிகலா வழக்கறிஞரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

தமிழக அரசுக்கு கட்டுப்பட வேண்டும்

பல்கலைக்கழகங்களை வளர்த்தெடுக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. ஏனென்றால், இது எங்காது முழுப் பொறுப்பு  அதேநேரத்தில், மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு பல்கலைக் கழகங்கள் செயல்பட வேண்டும். பல்கலைக் கழகங்களின் உண்மையான நோக்கம் என்பது அனைவருக்குமான அறிவுத்தளத்தை செம்மைப்படுத்துவது! சமூகநீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தில் பகுத்தறிவைக் கூர்மைப்படுத்துவதாக, நம்முடைய கல்வி நிலையங்கள் செயல்பட வேண்டும் சிந்தனை கொண்ட சமூகத்தையும், அறிவுப்பூர்வமான மாணவர்களையும் உருவாக்கக் கூடிய கடமையைத்தான் பல்கலைக்கழகங்கள் அறிவியல் சிந்தனை செய்ய வேண்டும்! நாட்டின் மற்ற மாநிலங்களைவிட நாம் முன்னேற்றம் அடைந்ததற்கும். தனித்துத் தெரிவதற்கும் இத்தகைய கொள்கை விழுமியங்கள்தான் காரணம்!

டைவர்ஸ் கேட்டு டார்ச்சரா..? ப்ளாக் மெயில் பன்னுகிறேனா..? தீபாவின் புகாருக்கு திடீர் விளக்கம் அளித்த மாதவன்

மாநில அரசின் உரிமை பிரச்சனை

"ஒன்றிய- மாநில அரசு உறவுகள்" குறித்து ஆராய 2007இல் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு. பூஞ்சி அவர்கள் தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு "துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும்” மசோதைவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறோம். ஏனென்றால் இது மாநில அரசினுடைய உரிமை தொடர்புடைய பிரச்சினை மாநிலத்நினுடைய பல்கலைக்கழகக் கல்வியுரிமை தொடர்பான பிரச்சினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை! ஆகவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும், துணை வேந்தர்களாகிய நீங்கள் எல்லாம் செயல்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். பட்டம் வாங்கும் இளைஞர்களை அல்ல எவரோடும் போட்டியிடும் தகுதி படைத்த இளைஞர்களை தமிழ்நாட்டுக் கல்வி முறையானது உருவாக்கி இருக்கிறது. 'நீட்' தேர்வுக்கு எதிராக நாம் இருக்கிறோம். அந்தத் தேர்வுக்குப் பயந்து அதனை நாம் எதிர்க்கவில்லை. அது உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக இருக்கிறது என்பதால் எதிர்க்கிறோம். படிப்புதான் தகுதியைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர தகுதியிருந்தால் தான் படிக்கவே வர வேண்டும் என்று சொல்வது, இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி! இதனால்தான் எதிர்க்கிறோம்! 

கல்வி உரிமையைப் போராடிப் பெற்ற சமூகம் நாம் என்கிற காரணத்தால் எதிர்க்கிறோம்! போராடி சுயமரியாதையை நிலைநிறுத்திய சமூகம். இந்தத் தமிழ்ச்சமூகம் என்பதால் எதிர்க்கிறோம்! கல்வியால் முன்னேறுகின்ற சமூகம் நாம் என்பதால் எதிர்க்கிறோம்! பின்னால் வரக்கூடிய தீமைகளை கடந்தகால வரலாறுகளின் அடிப்படையில் எடை போட்டு எதிர்க்கிறோம்! எந்தப் படிப்பாக இருந்தாலும், அதனை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதற்காக, நம்முடைய அணுகுமுறைகளும் திட்டமிடுதலும் இருக்க வேண்டும். மாணவர்களை கல்வியிடம் இருந்து அந்நியப்படுத்தும் அத்தனையையும் நாம் எதிர்க்க வேண்டும்! அந்த அடிப்படையில்தான் நீட் தேர்வை மட்டுமல்ல புதிய கல்வி கொள்கையையும் நாம் எதிர்க்கிறோம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிணைந்து சந்திக்கலாம்..! ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு டிடிவி தினகரன் திடீர் அழைப்பு

 

click me!