குற்றப்பத்திரிக்கையே வரல... அதற்குள் என்ன அவசரம்.. ஸ்ரீமதி தற்கொலையே என்ற நீதிபதிக்கு முஸ்லீம் லீக் கண்டனம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 30, 2022, 12:34 PM IST
Highlights

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே கள்ளக்கறிச்சி மாணவி தற்கொலைதான் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது ஏன் என்றும், இது கண்டனத்திற்கு உரியது என்றும் இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் தடா ரஹூம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே கள்ளக்கறிச்சி மாணவி தற்கொலைதான் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது ஏன் என்றும், இது கண்டனத்திற்கு உரியது என்றும் இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் தடா ரஹூம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

ஸ்ரீ மதி மரணம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற நீதியரசரின் விசித்திரமான தீர்ப்பை ஜனநாயக முறையில் கண்டனத்தை தெரிவிப்பது ஒவ்வொரு குடிமக்களின் கடமை, அந்த அடிப்படையில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக எமது கண்டனங்கள், கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்புக்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என‌ சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சிபிசிஐடி புலன் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது, மாணவி ஸ்ரீ மதி தற்கொலையா கொலையா என்று காவல்துறை இறுதி குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது தான் தெரிய வரும். மாணவி மரணம் குறித்த ஜிப்மர் குழுவின் ஆய்வு அறிக்கையை மாணவி ஸ்ரீ மதி குடும்பத்தாரிடம் வழங்க முடியாது விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் தெரிவித்தது உயர் நீதிமன்றம் ஜிப்மர் குழுவின் ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கியது மட்டுமின்றி நிரபராதிகள் என்பது போல தீர்ப்பில் கூறியது ஏன் ?

இதையும் படியுங்கள்:  இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதியே...! விநாயகர் சதூர்த்தி வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்

சிபிசிஐடி தீவிர புலன் விசாரணையில் மாணவி ஸ்ரீ மதிக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் போது மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தால் அப்போது இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு குற்றவாளிக்கு சாதகமாக அமைந்து விடுமே இதை கவனத்தில் ஏற்றுக்கொள்ளாதது ஏன் ?

இதையும் படியுங்கள்: நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிணைந்து சந்திக்கலாம்..! ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு டிடிவி தினகரன் திடீர் அழைப்பு

மாணவி ஸ்ரீ மதி மரணத்திற்கு முன் எழுதியதாக கூறப்படும் கடிதம் உண்மையா பொய்யா என கையெழுத்து பதிவு ஆய்வு காவல்துறையே இன்னும் ஆய்வு செய்யாததற்கு முன்பே அக்கடிதம் ஸ்ரீ மதி எழுதியது தான் என உயர் நீதிமன்றம் முடிவு செய்தது ஏன் ‌?ஸ்ரீ மதி தோழிகள் கொடுத்த வாக்குமூலம் காவல்துறை விசாரணை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் இணைப்பதற்கு முன்பே உயர் நீதிமன்றம் இது பற்றி அவசர அவசரமாக ஜாமீன் மனு மீதான விசாரணையில் கருத்து கூறியது ஏன் ?

ஸ்ரீ மதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஜாமீன் கொடுப்பதும் கொடுக்காமல் மறுப்பதும் உயர் நீதிமன்ற நீதியரசரின் உரிமை ஆனால் ஆசிரியர்கள் மாணவி ஸ்ரீ மதிக்கு நன்றாக படிக்க தான் ஆலோசனை கூறினார்கள் மாணவி ஸ்ரீ மதி தற்கொலை செய்து கொண்டது வருத்தமாக உள்ளது என்று ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ் நீதி மன்றம் வழங்கியது ஏன் ?

குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கியதை விட குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐந்து பேரும் நிரபராதிகள் என்பது போல உயர் நீதிமன்ற நீதியரசரின் தீர்ப்பு உள்ளதை எமது கண்டனங்களை  இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!