இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதியே...! விநாயகர் சதூர்த்தி வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்

Published : Aug 30, 2022, 12:23 PM IST
இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதியே...! விநாயகர் சதூர்த்தி வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்

சுருக்கம்

இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி; சகல கணங்களுக்கும் தலைமை தாங்கும் விக்னேஷ்வர் ஆகிய விநாயகப் பெருமானை முழு முதலாகத் துதித்து தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெறுவது உறுதி என்பது நம் நாட்டு மக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை ஆகும் என தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி

விநாயகர் சதூர்த்தி தினத்தையொட்டி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஞான முதல்வனாம், வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி; சகல கணங்களுக்கும் தலைமை தாங்கும் விக்னேஷ்வர் ஆகிய விநாயகப் பெருமானை முழு முதலாகத் துதித்து தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெறுவது உறுதி என்பது நம் நாட்டு மக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை ஆகும்.

டைவர்ஸ் கேட்டு டார்ச்சரா..? ப்ளாக் மெயில் பன்னுகிறேனா..? தீபாவின் புகாருக்கு திடீர் விளக்கம் அளித்த மாதவன்

துன்பங்கள் நீக்க வேண்டும்

"வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்" என்ற வாக்கிற்கு இணங்க விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும், வாழ்வை செழிப்பாக்கும் எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை பக்தியுடன் வழிபட்டு, அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி, வாழ்வில் நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, நம் இதய தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஒற்றுமை ஓங்கட்டும், வெற்றி கிட்டட்டும், அன்பும், அமைதியும் நிலவட்டும்- ஓபிஎஸ் அறிக்கை

 

PREV
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்